search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை சந்தையில் மல்லிகை பூவுக்கு கடும் கிராக்கி
    X

    தோவாளை சந்தையில் மல்லிகை பூவுக்கு கடும் கிராக்கி

    • 1 கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை
    • ஓணம் பண்டிகை விற்பனை களை கட்டியது

    கன்னியாகுமரி:

    ஓணம் பண்டிகை நாளை மறுநாள் (8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை களை கட்டியுள்ளது.

    தமிழக மற்றும் கேரள வியாபாரிகள், பொதுமக்கள் சந்தைக்கு படையெடுத்து வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். அவர்களின் வருகையை கருத்தில் கொண்டு தோவாளை சந்தைக்கு கூடுதல் பூக்கள் வரவழைக்கப்பட்ட போதி லும், பூக்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

    அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லி கைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. நாளை மறுநாள் நடைெபறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி மக்கள்அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட இருப்பதால் பூக்களுக்கு வரும் நாட்களில் மேலும் அதிக கிராக்கி இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தற்போது தோவாளை சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்திற்கும் பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும், சேலம்அரளி, சம்பங்கி ஆகியவை கிலோ ரூ.400க்கும், கனகரம்பரம் ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும் விற்கப்ப டுகிறது.

    மற்ற பூக்களும் விலை உயர்ந்து உள்ளது. இன்று மட்டும் 150 டன் பூக்கள் விற்பனையாகியுள்ளது.ஓணம் பண்டிகை விழா நாளில் தோவாளை பூ சந்தையில் பூக்கள் விலை இதை விட அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் 200 டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள்இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×