search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் காலியாக இருக்கும் 63 ஆசிரியர் பணியிடங்கள்
    X

    குமரியில் காலியாக இருக்கும் 63 ஆசிரியர் பணியிடங்கள்

    • தற்காலிகமாக ஆசிரிய ர்களை தேர்வு செய்வதற்கான பணி நடந்து வருகிறது
    • நாகர்கோவில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் விபரம் கேட்டு குவிந்த பட்டதாரிகள்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடுத்து அந்தந்த மாவட்டங்களில் தற்காலிகமாக ஆசிரிய ர்களை தேர்வு செய்வதற்கான பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில்

    பட்டதாரி ஆசிரியர்கள் 18,முது நிலை ஆசிரியர்கள் 6, இடைநிலை ஆசிரியர்கள் 39 என 63 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் பட்டதாரிகள் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

    எந்தெந்த பள்ளிகளில் இடம் காலியாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள அவர்கள் வந்திருந்தனர். வந்தவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் காலியிடங்கள் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.பின்னர் முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தியை சந்தித்தும் அவர்கள் பேசினார்கள்.இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.காலியாக உள்ள பணி இடங்கள் அந்தந்த பள்ளியிலேயே நிரப்பப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

    Next Story
    ×