என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருங்கல் பஸ் நிலையத்தில் கொலுசு திருட்டு
- திருட்டு போன கொலுசின் மதிப்பு ரூபாய் 30 ஆயிரம்
- கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் பாலக்காவி ளையை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி சாந்தி (வயது 50).சம்பவத்தன்று இவர் தனது மகள் ஜென்சியின் குழந்தை அக்சிதாவுடன் கருங்கல் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் ஏறி உள்ளார். பஸ்சில் ஏறியபின் பார்த்தபோது அக்சிதா காலில் கிடந்த ஒரு பவுன் எடையுள்ள கொலுசு திருட்டு போயிருந்தது தெரிந்தது. திருட்டு போன கொலுசின் மதிப்பு ரூபாய் 30 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து சாந்தி கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






