search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் - தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    X

    தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் - தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை

    • மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும், ஆசிரியர்களின் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும்
    • பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பணி மாற்றம் தொடர்பான கூகுள் மீட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததாக காரணம் காட்டி கட்டிடவியல் மற்றும் எந்திரவியல் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரி வுகளை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவை கைவிட வேண்டும். மேலும் துணை வேந்தர் கூறியதாக கூறப்படும் இத்தகவலால் மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும், ஆசிரியர்களின் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பொறியியல் கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழ கத்தின் வாயிலாக தமிழகம் எங்கும் 14 உறுப்பு கல்லூரிகள் பல்வேறு காலக்கட்டங்களில் தொடங்கப்பட்டன.

    இந்த கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் அண்ணா பல்கலைக்கழ கத்தின் துணை வேந்தர் கூகுள் மீட்டின் வழியாக கலந்தாய்வு நடத்தியதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், இக்கலந்தாய்வில் உறுப்பு கல்லூரிகளில் உள்ள தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளையும், ஆங்கில வழியில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பரிவுகளையும் ரத்து செய்வதற்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    ரத்து செய்யப்படும் பாடப்பிரிவுகளில் பணியாற்றி வரும் இடைக்கால பேராசிரி யர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்படும். மேலும் கிராமப்புற மாணவர்களின் பொறியியல் கனவை நனவாக்க அவர்கள் வெகுதூரம் சென்று பொறியியல் படிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலையும் ஏற்படும்.கட்டிடவியல் மற்றும் எந்திரவியல் பாடப்பரி வுகள் நீக்கப்படுவதற்காக பல்கலைக் கழக நிர்வாகத்தின் சார்பில் கூறப்படும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

    உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களில் பெரும்பான்மையினர் இடைக்கால பணியாளர்கள் தான். அவர்களில் பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஒரே ஆணையில் பணி நீக்குவது நியாயமற்றது. அவர்கள் மட்டுமன்றி உறுப்பு கல்லூரிகளில் சேர்ந்து கட்டிடவியல் அல்லது எந்திரவியல் படிக்கும் வாய்ப்பை கல்லூரிகள் உள்ள பகுதியை சார்ந்த மாண வர்கள் இழப்பார்கள்.

    தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வியில் அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. தமிழ் வழிப் படிப்புகள் அனைத்தும் மூடப்பட்டால், தமிழ்நாடு அரசு பணிகளில் இந்த இட ஒதுக்கீட்டிற்கு எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் இந்த கல்லூரிகள் மட்டுமே தமிழ் வழி பொறியியல் படிப்புகளை வழங்குகின்றன. மேலும் இவ்வாறு தமிழ் வழி கல்வியை நிரந்தரமாக மூடுவதன் மூலம் பள்ளிகளிலும், மாணவர்கள் தமிழ் வழியில் சேர்ந்து பயில்வது கணிசமாக குறையும்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் இதே பாடப்பிரிவில் சேர்வதற்கு கடும் போட்டி நிலவும் நிலையில் உறுப்பு கல்லூரிகளில் சேர மாணவர்கள் முன்வராததற்கு காரணம் இரண்டிற்கு இடையிலான கட்டமைப்பு வசதிகள் வேறுபாடுகள் தான். உறுப்பு கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை அண்ணா பல்கலைக்கழ கத்திற்கு இணையாக மேம்படுத்தும் சவாலை தான் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பாடப்பரிவுகளை ரத்து செய்யும் முடிவை அல்ல. தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த விவாதம் எழும்போதெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வழியில் பொறியியல் படிப்பை அறிமுகப்படுத்தியதை தமிழ்நாடு அரசு பெருமையுடன் நினைவு கூறுகிறது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக ஒரே நேரத்தில் 11 உறுப்பு கல்லூரிகளின் தமிழ் பாடப்பிரிவை ரத்து செய்வது அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழ கத்திற்கும் கண்டிப்பாக பெருமை சேர்க்காது. இதன் அடிப்படையில் உறுப்பு கல்லூரிகளின் கட்டிட வியல் மற்றும் எந்திரவியல் பாடப்பரிவு களை ரத்து செய்யும் திட் டத்தை கைவிட வேண் டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×