search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு

    • சிவப்பு இளநீர் ரூ.35 முதல் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
    • ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை தர்ப்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். காலை யில் இருந்தே மாவட்டம் முழுவதும் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்து வருவதால் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    நாகர்கோவில் நகரில் மதியம் நேரங்களில் அடித்து வரும் சுட்ெடரிக்கும் வெயி லின் காரணமாக சாலைகளில் கானல்நீர் தெரியும் அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் உள்ளது. வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக சுற்றுலா தலங்களிலும் கூட்டம் குறைவாகவே காணப் படுகிறது. கன்னியா குமரி, குளச்சல் பீச், சொத்த விளை பீச், வட்டக்கோட்டை பகுதிகளில் வழக்கமாக கோடை நேரங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரிக்கும். ஆனால் தற்பொழுது சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது.

    சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அருந்த தொடங்கியுள்ளனர். இதனால் குளிர்பானங்களின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இளநீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி வேறு மாவட்டங்களில் இருந்தும் இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ரோட்டோரங்களில் இளநீர் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    சுங்கான் கடை, சுசீந்திரம், நாகர்கோவில் பகுதிகளில் சாலை ஓரங்களில் அதிக அளவு பல்வேறு விதமான இளநீர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இளநீர் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளதையடுத்து தற்போது விலை அதிக ரித்துள்ளது. சிவப்பு இளநீர் ரூ.35 முதல் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற இளநீர்கள் ரூ.30 முதல் ரூ.35-க்கும் விற்கப் பட்டு வருகிறது.

    வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இளநீர் அருந்த தொடங்கியுள்ளனர். தர்ப்பூசணி விற்ப னையும் அமோகமாக நடந்து வருகிறது.

    கரியமாணிக்கபுரம், கன்னியாகுமரி, மார்த்தாண் டம் பகுதிகளில் தர்பூசணி விற்பனைக்கு அதிக அளவு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை தர்ப்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நுங்கு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நுங்குகளை வாங்கி வந்து சாலையோரங்களில் தள்ளுவண்டிகள் மூலமாக விற்ப னை செய்து வருகிறார்கள்.

    வெப்பத்திலிருந்து தப்பிக்கும் வகையில் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு சென்று உல்லாச குளியலிட்டு வருகிறார்கள். திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவு அங்கு குவிந்துள்ளனர்.

    Next Story
    ×