search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.
    • தேவசகாயம் மவுண்ட் வட்டார முதல்வர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து தேர்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருவிழாகொடியை ஏற்றி வைத்து மறையுரையாற்றிறுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் எட்மண்ட் மறையுரையாற்றுகிறார்.

    விழாவின் 9-ம் நாளான 25-ந்தேதி காலை 7 மணிக்கு இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணியாளர் சைமன் தலைமை தாங்கி திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு நோயாளி களுக்கான திருப்பலியை அருட்பணியாளர் ஆன்டணி பெர்டிக் புரூனோ தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஆராதனையை கோட்டார் மறைமாவட்ட செயலாளர் மரிய கிளாட்ஸ்டன் நடத்துகிறார். தேவசகாயம் மவுண்ட் வட்டார முதல்வர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் 10-ம் நாளான 26-ந்தேதி காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி பெருவிழா திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி, கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் டோனி ஜெரோம், இணை பங்கு அருட்பணியாளர் விஜின் பிரைட் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை, மக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×