என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தபோது எடுத்த படம்
கருங்கல் அருகே கார் திடீரென தீ பிடித்து எரிந்தது
- கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
- குளச்சல் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள இனயம் பகுதியை சேர்ந்தவர் அசின். இவர் தனது நண்பருடன் காரில் கருங்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். கார் பாலூர் பகுதியில் வரும்போது திடீரெனை முன்பக்கம் இருந்து புகை வந்து உள்ளது. உடனடியாக அவரும், அவரது நண்பரும் காரை நிறுத்திவிட்டு இறங்கி விட்டனர். சிறிது நேரத்தில் காரில் தீப் பிடித்தது. அப்பகுதியில் கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
மேலும் குளச்சல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






