search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் அரசு பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவ-மாணவிகள்
    X

    நாகர்கோவிலில் அரசு பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவ-மாணவிகள்

    • கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்குமா?
    • இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள மாணவ- மாணவிகள் ஏராளமானோர் நாகர்கோவில் நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.

    இதனால் தினமும் காலை நேரங்களில் அரசு பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும். ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, சாமிதோப்பு, பூதப்பாண்டி, தடிக்காரன் கோணம், தக்கலை, சுங்கான்கடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு மாணவ-மாணவிகளும் நாகர்கோவில் நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகிறார்கள்.

    இதனால் அரசு பள்ளிகளில் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இன்று காலையில் ஆரல்வாய் மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் பயணம் செய்தனர். மாணவிகளும் படிக்கட்டில் தொங்கியபடி பஸ்ஸில் வந்தனர்.

    படியில் பயணம் நொடியில் மரணம் என்பார்கள். ஆனால் மாணவிகள் ஆபத்தை உணராமல் பயணம் செய்தது பார்ப்பவர்களை பதற வைத்தது. மாணவ-மாணவிகள் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்களை அந்த வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் ராமன் புதூர் பகுதியிலும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். பாலிடெக்னிக் மாணவர்களும் கல்லூரி மாணவ-மாணவிகளும் படிக்கட்டில் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. எனவே டிரைவர், கண்டக்டர்கள் மாணவ- மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை ,மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டு இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    குமரி மாவட்ட போலீசார் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். இதேபோல் அரசு பஸ்களிலும் படிக்கட்டில் பயணம் செய்து செய்யும் மாணவ-மாணவிகளை கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் மாலை நேரங்களில் பள்ளி முடிந்து பள்ளி கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவ-மாணவிகள் அண்ணா பஸ்நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களில் படிக்கட்டில் தொங்கி செல்லும் நிலையை நீடித்து வருகிறது. இதை கண்காணித்து போக்குவரத்து கழக அதிகாரிகளும் போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    Next Story
    ×