search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகர பகுதியில் இறைச்சி கழிவுகளை கழிவு நீர் ஓடையில் விட்டால் கடும் நடவடிக்கை
    X

    நாகர்கோவில் மாநகர பகுதியில் இறைச்சி கழிவுகளை கழிவு நீர் ஓடையில் விட்டால் கடும் நடவடிக்கை

    • பஸ் நிறுத்தத்தை சிறிது தொலைவில் அமைப்பது தொடர்பாக ஆலோசித்துள்ளோம்
    • இறைச்சி கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் சுகாதார சீர்கேடு, கழிவுநீர் பிரச்சனை, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சனைகளை விரைந்து தீர்க்க மேயர் மகேஷ் தினமும் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்.

    பால்பண்ணை சந்திப்பு பகுதியில் இருந்து இன்று தனது ஆய்வை மேயர் மகேஷ் தொடங்கினார். அப்போது அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் போக்குவரத்துக்கு இடை யூறாக இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த பஸ் நிறுத்தத்தை சிறிது தொலை வில் மாற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண் டார். பின்னர் டெரிக் சந்திப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்று அரசின் விதிமுறைக்குட்பட்டு செயல்படாதது தெரிய வந்தது. ஏற்கனவே அந்த இறைச்சி கடைக்கு நோட் டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    டெரிக் சந்திப்பு பகுதியில் மழை நேரங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சீரமைத்து சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரி யிடம் கூறினார்.

    பின்னர் ஜேக்கப் தெரு பகுதியில் ஆய்வு மேற் கொண்டபோது காலி இடத்தில் குப்பைகள் மழை போல் குவிந்து கிடந்தது. அந்த இடத்தில் கிடந்த குப்பைகளை உடனடியாக மாற்றுவது தொடர்பாக அதிகாரியிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பால்பண்ணை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் போக்கு வரத்துக்கு இடையூறாக இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.பஸ் நிறுத்தத்தை சிறிது தொலை வில் அமைப்பது தொடர் பாக ஆலோசித் துள்ளோம். இது தொடர்பாக ஆலோ சித்து நடவடிக்கை எடுக்கப் படும்.

    ஏற்கனவே நாகர்கோவில் மாநகர பகுதியில் இறைச்சி களை வெட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. தற்பொழுது இறைச்சி கடையில் உள்ள கழிவுகள் சாக்கடையில் கலப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் துர்நாற் றம் வீசுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இறைச்சிகளை வெட்டும் ேபாது அரசின் விதிமுறைகள் உட்பட்டு வெட்ட வேண்டும். இல்லாத இறைச்சி கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜேக்கப் தெரு பகுதியில் காலி இடத்தில் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டு இருந்தது. அந்த இடம் யாருக்கு சொந்தமான இடம் என்று தெரியவில்லை. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமா னோர் அந்த பகுதியில் குப்பைகளை தொடர்ந்து கொட்டி விடுவதால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. உடனடியாக அந்த குப்பை களை அகற்ற அதிகாரி களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரிடம் பேசி குப்பைகளை அங்கே கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் நகரில் மழை நேரங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் சாக்கடைகள் சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஆணை யாளர் ஆனந்த மோகன், நகர்நல அதிகாரி ராம் மோகன், என்ஜினீயர் பால சுப்ரமணியன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×