என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆவின் பாலகங்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் அதிகாரி எச்சரிக்கை
- கடந்த ஆண்டில் ரூ.70 லட்சம் லாபம்
- சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் போது ஒரு சில குழுக்களுக்கு தள்ளுபடி
நாகர்கோவில், பிப்.16-
குமரி மாவட்ட பஞ்சா யத்து கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் சிவக்குமார், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜான்சிலின் விஜிலா உள்பட கவுன்சி லர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தலைவர் மெர்லியன்ட்தாஸ் பேசிய தாவது:-
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலமாக இதுவரை எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் உரத் தட்டுப்பாடு உள் ளது. அதை சமாளிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் போது ஒரு சில குழுக்களுக்கு தள்ளுபடி செய்யப்பட வில்லை. குழந்தை தொழி லாளர்கள் குமரி மாவட் டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இது தொடர்பாக அதிகாரிகள் என்ன நடவ டிக்கை எடுத்து உள்ளார்கள். செங்கல்சூளைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக புகார்கள் வருகிறது. ஆவின் பாலகங்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படு கிறது. தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம், களியக்காவிளை பஸ் நிலையங்களில் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவ தும் பல்வேறு இடங்களில் நாய் தொல்லை உள்ளது.இதனால் விபத்துகளில் உயிரிழப்புகள் கூட நடந்துள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அதிகாரிகள் பேசிய தாவது:-
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.440 கோடி பயிர் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்டது. அதில் கடந்த ஜனவரி மாதம் வரை ரூ.160 கோடிக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மீதமுள்ள நிர்ணயிக்கப்பட்ட பயிர் கடன் தொகை முழுமையாக வழங்கப்படும். பொது சேவை மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு பட்டா, சிட்டா உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை.
ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் யூரியா தட்டுப்பாடு உள்ளது. அந்த யூரியா தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் நபர்களுக்கு ரூ.363 கோடியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 200 பேருக்கு தள்ளுபடி பட்டியல் தயார் செய்யப்பட்ட அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கூட்டு றவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை முறையாக மற்றும் தகுதியின் அடிப்படையில் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் இது தொடர்பான புகார்கள் இருக்கின்றன. அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள செங்கல் சூளை உள்பட பல கடை களிலும் குழந்தை தொழி லாளர்கள் உள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்து உள்ளோம். குழந்தை தொழிலாளர்கள் அங்கு வேலை பார்க்கவில்லை.
குமரி மாவட்டத்தில் தினமும் 21 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து 6000 லிட்டர் பால் கிடைக்கப்பெற்ற நிலையில் திண்டுக்கலில் இருந்து 15,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பாலகங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினை பொறுத்தமட்டில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் உழவர் சந்தை, கலெக்டர் அலுவலகம் உட்பட 9 இடங்களில் ஆவின் கட்டுப்பாட்டில் பாலங்களும் 26 தனியார் பாலங்களும் செயல் பட்டு வருகிறது. கடந்த 2021- 22 ம் ஆண்டில் ரூ.70 லட்சம் லாபம் கிடைத்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் செயல்பட்ட ஆவின் பாலகம் கொரோனா காலத்தில் மூடப்பட்டது. மீண்டும் அங்கு ஆவின் பாலகம் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






