search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களுடன் முதல்வர் முகாமில் பெற்றப்பட்ட தகுதியான மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்
    X

    மக்களுடன் முதல்வர் முகாமில் பெற்றப்பட்ட தகுதியான மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்

    • கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு
    • பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு நில அளவீடு, வாரிசு, சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட ஆளூர் சமூக நலக்கூடத்தில் மக்களு டன் முதல்வர் முகாம் நடைபெற்றது. பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் முகாமினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 1,2,3 வட்டங்கள் அடங்கிய ஆளூர் பகுதியில் நடை பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான அரங்குகள் ஒதுக்கப்பட் டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் அனைத்து துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள், விண்ணப்பங்கள் உள்ளிட்டவைகளை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கிய தோடு, தங்களுக்கு தேவை யான ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் அலுவ லர்களிடம் கேட்டறிந்தனர்.

    முகாமில் எரிசக்தித்துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கம்பங்கள் மாற்றம் குறித்த சேவைகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறையில் கட்டு மான வரைபட ஒப்பு தல், சொத்து வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் வழங்குதல், தண்ணீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறையின்கீழ் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு நில அளவீடு, வாரிசு, சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்.

    காவல் துறையின் கீழ் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக, நில அபகரிப்பு, மோசடி, வரதட்சணை மற்றும் இதர புகார்கள், போக்சோ சட்டத்தின் கீழ் புகார்கள் அளிக்கவும், மாற்றுத்திற னாளிகள் துறையில் பராமரிப்பு உதவித் தொகை, மாற்றுத்திற னாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, செயற்கைக்கால், காது கேட்கும் கருவி, இதர உதவி உபகரணங்கள், சுய தொழில் வங்கி கடன் உதவி, கல்வி உதவித்தொகை தொழிற் பயிற்சி ஆகியவற்றிற்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல், கூட்டுறவு துறை யின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், புதுமைப்பெண் கல்வி உதவித்திட்டம், ஆதி திராவிடர் நலத் துறையில் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா, சலவைப்பெட்டி, தையல் எந்திரம் மற்றும் இதர உதவிகள், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தாட்கோ கடனுதவி ஆகிய திட்டங்களில் விண் ணப்பிக்கிறவர்கள் அதற்கு ரிய ஆவணங்களை வழங்கி விண்ணப்பிக்கலாம். தங்களது கோரிக்கையினை கணினியில் பதிவுசெய்ய வேண்டியிருப்பின், அக்கோ ரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப் பாக கொண்டுவர வேண் டும்.

    முகாம் ஆளூர் பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் மிகவும் பேரூ தவியாக இருக்கும் என்பதை தெரிவத்துக்கொள்கிறேன். முகாமில் 252 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமில் தனித்துணை கலெக்டர் குழந்தைசாமி, நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் பால சுப்பிரமணியன், கல்குளம் தாசில்தார் கண்ணன், மாநகர நல அலுவலர் டாக்டர் ராம்குமார், அனைத்து துறை அலுவ லர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×