search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மாநில கடற்கரை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் - மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    X

    குமரி மாவட்டத்தில் மாநில கடற்கரை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் - மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    • 22 மாவட்டங்களைச் சேர்ந்த 214 வீரர்-வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.
    • ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான கடற்கரை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் குமரி மாவட்டம் பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. பல்வேறு பிரிவுகளின் கீழ் 2 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கடலூர் உள்பட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 214 வீரர்-வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். பள்ளம்துறை ஊராட்சி மன்ற தலைவர் ஆன்றனிமுன்னிலை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், போட்டியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளம் ஊர் தலைவர் சார்லஸ், செயலாளர் ரெனிஸ்டன், பொருளாளர் சகாய ஜார்ஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், சீனியர் கூட்டுறவு ஆய்வாளர் பினு, கன்னியாகுமரி விளையாட்டு அலுவலர் ராஜேஷ், மாவட்ட மல்யுத்த சங்க செயலாளர் ரஞ்சித், பயிற்சியாளர் நிகேஷ் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×