search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
    X

    பெண் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை
    • நாகரில் ஓடும் பஸ்சில் 9 ½ பவுன் நகைஅபஸே்

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் நகை திருட்டு சம்ப வங்கள் தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் ஒரே நாளில் 4 பேரிடம் 26 பவுன் நகை பறிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பெண் கொள்ளையர்கள் சிலரின் புகைப்படங்களை வெளி யிட்டும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது டிப்-டாப் உடைஅணிந்து வந்து பெண்கள் கைவரிசை காட்டி செல்வது தெரிய வந்துள்ளது.

    மேலும் இந்த கொள்ளை சம்பவங்களில் வெளியூர் கொள்ளையர்கள் ஈடுபடு வதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொள்ளை கும்பலை கைது செய்ய தனிப்படை போலீசார் புது வியூகங்கள் அமைத்து வருகிறார்கள். இதற்கிடையில் நாகர்கோவி லில் ஓடும் பஸ்சில் மேலும் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. நாகர்கோவில் இருளப்பபுரம் அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த வர் செந்தில்குமார். இவரது மனைவி ரதி (வயது 37). இவர் நேற்று கன்னக் குறிச்சியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்ல ராமன்புதூர் சந்திப்பில் இருந்து அரசு பஸ்சில் ஏறினார்.

    கோணம் தொழில் மையம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது ரதி கழுத்தில் கிடந்த 9½ பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து பஸ் நடுவழியில் நிறுத்தப் பட்டது. பயணிகள் அனை வரும் சோதனை செய்யப்பட்டனர். ஆனால் நகை சிக்க வில்லை.

    இதுகுறித்து ரதி, ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரதியிடம் பெண் கொள்ளை யர்கள் தான் கைவரிசை காட்டி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள்.

    நகையை திருடிய கும்பல் உடனடியாக பஸ்சை விட்டு இறங்கி தப்பி சென்று விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரதி ஏறிய பகுதியிலிருந்து கோணம் பகுதி வரை உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீ சார் ஆய்வு செய்து வருகி றார்கள். கொள்ளை கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    நாகர்கோவிலில் அடுத்த டுத்து நடந்து வரும் அனைத்து சம்பவங்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள்.

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர்மோள் (23). சம்பவத்தன்று இவர் ஆசாரிப்பள்ளம் பெரு மாள்நகர் 2-வது தெருவில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர்கள், திடீரென ஜெனிபர்மோள் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். ஆனால் தங்க சங்கிலி கொள்ளை யர்கள் கையில் சிக்க வில்லை. அது அறுந்து கீழே விழுந்தது. ஜெனிபர் மோள் கூச்சலிடவே கொள்ளை யர்கள் மோட்டார் சைக்கி ளில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஆசாரிப் பள்ளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீ சார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். சி.சி.டி.வி.யில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருப்பது தெரிய வந்துள் ளது.

    அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப் பட்டு வருகிறது.

    Next Story
    ×