search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இன்று 5 கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு
    X

    குமரி மாவட்டத்தில் இன்று 5 கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு

    • நாடு முழுவதும் இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது.
    • குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது.

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.

    நாகர்கோவிலில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், சார்பு நீதிபதி நம்பிராஜன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார் மற்றும் நீதிபதிகள் சிவசக்தி, கங்கராஜ், தாயுமானவர், அலிமாபயிற்சி நீதிபதி கீர்த்தனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் சொத்து பிரச்சினை தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்கு மனு தாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆஜரா னார்கள். இதில் ஒருசில வழக்கு சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.

    நீதிமன்றங்களில் நேரடியாக தொடுக்கப்பட்ட2090 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மதியத்திற்குள் 23 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதன் மூலமாக ரூ.84 லட்சத்து 45 ஆயிரம் தீர்வு தொகையாக வழங்கப்பட்டது.

    மேலும் மாநகராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் முக கவசம் தொடர்பாக 11800 வழக்குகளில் 11 ஆயிரத்து 471 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.41 லட்சத்து 60 ஆயிரத்து 100 வசூலிக்கப்பட்டது.

    வங்கி வழக்குகள் 14 ஆயிரத்து 908 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 11 ஆயிரத்து 946 வழக்குகள் தீர்வு காணப்பட்டு உள்ளது. இதன் மூலமாக ரூ.4 கோடியே 67 லட்சத்து 45 ஆயிரத்து 711 வசூல் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×