search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பள்ளியில் மாணவ-மாணவிகளின் 150 படைப்புகள் அடங்கிய அறிவியல் கண்காட்சி
    X

    கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தபோது எடுத்த படம் 

    கன்னியாகுமரி பள்ளியில் மாணவ-மாணவிகளின் 150 படைப்புகள் அடங்கிய அறிவியல் கண்காட்சி

    • கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபரும் பள்ளி தாளாளருமான அருட்பணியாளர் ஆன்றனி அல்காந்தர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமைஆசிரியை பிரசன்னா, பங்குப் பேரவை துணைத் தலைவர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் சிலுவை ஆன்றனி வரவேற்றுபேசினார்.

    நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழக தொழிற் நுட்ப கல்லூரியின் மனித நேயம் மற்றும் அறிவியல் துறை உதவி பேராசிரியர் வின்சென்ட் ஜெரின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். இயற்பி யல் துறை, வேதியியல் துறை, தாவரவியல் துறை, விலங்கி யல் துறை, வர லாற்றுத் துறை, கணிதத் துறை போன்ற துறைகளிலி ருந்து 150 படைப்புகள் வைக் கப்பட்டிருந்தது.

    இதில் மழை முன்னறி விப்பான், ஒளிபடக் கருவி, வெப்பநிலை கண்ட றிதல், தெரு விளக்கு தானி யங்கி உலோகம் கண்டு பிடிக்கும் கருவி, நீராவி எந்திரம் ஆகியவை சிறப்பிடம் பெற்றது. சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர் ஜெய யோகினி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை உயர்நிலை ஆசிரியர் சகாய ஜெசி தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×