search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலந்தவிளை கடலோரப் பகுதியில் பேரறிஞர் அண்ணா மணல் சிற்பம்
    X

    இலந்தவிளை கடலோரப் பகுதியில் பேரறிஞர் அண்ணா மணல் சிற்பம்

    • செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு திருநாள் கொண்டாடப்பட்டது.
    • இந்த சிற்பத்தினை சுற்றுலா பயணிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு தமிழ்நாடு வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில் :

    புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இலந்தவிளை கடற்கரையில் மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு திருநாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி அண்ணா வை நினைவு கூறும் வகையில் அவரது படம் மற்றும் தமிழ்நாடு வரை ப்படம் மணல் சிற்பமாக வடிவமைக்கப்பட்டது.

    இந்த மணல் சிற்பத்தை கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார். அப்போது நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உடனிருந்தார். இதைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ம் நாளை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-அன்று தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு உருவான வர லாறு, மொழிவாரி மாகா ணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்ட ங்களும், தமிழகத்திற்காக உயிர் கொடுத்த தியாகிகள், தாய்நாட்டிற்கு பெயர் சூட்டிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள்.

    எல்லைப்போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது நினைவகங்கள் மற்றும் மண்டபங்களில் வண்ண விளக்குகளால் அலங்க ரித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இலந்தவிளை கடலோரப் பகுதியில் கடல் மண்ணினால் பேரறிஞர் அண்ணாவை நினைவு கூறும் வகையில் உருவா க்கப்பட்ட மாபெரும் மணல் சிற்பம் அமைக்கப்பட்டது.

    இந்த சிற்பத்தினை சுற்றுலா பயணிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு தமிழ்நாடு வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து கடற்கரை யில் மணலால் உருவாக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட்டினை அவர் பார்வையிட்டார். மேலும், விளையாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவி களுக்கிடையே கடற்கரை யில் நடைபெற்ற செஸ் போட்டியினை பார்வை யிட்டதோடு நான்கு சக்கர வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் ஸ்டிக்கரை ஒட்டினார்.

    நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், சுற்றுலா அலுவலர் சீதாராமன், விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டேவிட் டேனியல், புத்தளம் பேரூராட்சி தலை வர் சத்தியவதி, செயல் அலுவலர் ராஜேந்திரன், தமிழ்நாடு செஸ் கூட்ட மைப்பு துணை தலைவர் எப்ரோன், துணை தலை வர் பால்தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×