என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடக்கு தாமரைகுளம் ஞானமுத்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் சமபந்தி விருந்து
- அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
- பூ கரகம் எடுத்து வருதல், வில்லிசை, முத்தாரம்மனுக்கு பட்டு எடுத்து வருதல், அம்மனுக்கு அலங்கார தீபாரதனை நடைபெற்றது
தென்தாமரைகுளம் :
வடக்குதாமரைகுளம் ஸ்ரீஞானமுத்தீஸ்வரர் முத்தா ரம்மன் கோவிலில் 9-வது ஆண்டு தசரா விழா நேற்று முன்தினம் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
2-ம் நாள் விழாவான நேற்று காலை நையாண்டி மேளம், ஆற்றங்கரை விநாயகர் சன்னதியில் இருந்து ரத வீதி வழியாக பூ கரகம் எடுத்து வருதல், வில்லிசை, முத்தாரம்மனுக்கு பட்டு எடுத்து வருதல், அம்மனுக்கு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. விழாவையொட்டி நடைபெற்ற சமபந்தி விருந்தினை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, வடக்குதாமரைகுளம் ஊராட்சி தி.மு.க. நிர்வாகிகள் மகேந்திரன், அய்யப்பன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






