search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும்
    X

    'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும்

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேச்சு
    • அனைத்துத்துறை அலுவலர்கள் ஒன்றினைந்து பணியாற்றிட வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் "நம்ம ஊரு சூப்பரு" அளவிலான பல்துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய மக்களின் பங்கேற்புடன் கூடிய "நம்ம ஊரு சூப்பரு" எனும் மாபெரும் சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் செயல்பாடுகள் மேற்கொள்ளும் பொருட்டு சிறப்பாக நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

    நேற்று (20-ந்தேதி) முதல் அடுத்த மாதம் (2-ந்தேதி) வரை ஊரகப் பூங்காக்கள், பஸ் நிறுத்தங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற பொது இடங்களும் , நீர்நிலைகளும் சுத்தம் செய்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும். வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை பள்ளி மற்றும் தொடர்பான செயல்பாடுகள் கல்லூரி களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்.

    அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஊரகப்பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சுய உதவிக்குழு மூலமாக நீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்திடும் வகையில் விழிப்புணர்வு செயல்பாடு கள் மேற்கொள்ள வேண்டும்.

    அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் 01.10.2022 வரை சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்கள் திட்டத்திற்காக வீடுகள், பள்ளிகள், அங்கன் வாடி மையங்கள் போன்ற வற்றில் கீரைகள், முருங்கை, நெல்லி, பப்பாளி, இனிப்பு கிழங்கு போன்ற ஊட்டச்சத்து தோட்டங்களை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    2.10.2022 அன்று சிறப்பு பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் இல்லாத கிராமங்களை உருவாக்குதல், பாதுகாப்பான துப்புரவு மற்றும் திட திரவ கழிவுக்காக வழங்கப்படும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளின் செயல்பாட்டை உறுதி செய்தல் .

    பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பதுடன், பொது இடங்களில் குப்பை இல்லா மலும், திறந்தவெளியில் மலங்கழித்தலற்ற நிலை யினை உறுதி செய்தல், பயன்பாட்டிலிருக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்ய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும், இப்பணிகளை மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அனைத் துத்துறை அலுவலர்கள் ஒன்றினைந்து பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×