search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் சாரல் மழை
    X

    குமரியில் சாரல் மழை

    • பெருஞ்சாணியில் 7.8 மி.மீ. பதிவு
    • திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று திடீரென சீதோசன நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

    மலையோர பகுதிகளி லும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. லேசான சாரல் மழை காலையில் பெய்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு சென்றனர்.

    தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய் மொழி, கோழிப்போர் விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதி களிலும் மலையோர பகுதி யான பாலமோர் பகுதி யிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 7.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.10 அடியாக உள்ளது.

    அணைக்கு 610 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 560 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.03 அடியாக உள்ளது. அணைக்கு 269 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 310 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 12.92 அடியாகவும், சிற்றார்-2அணையின் நீர்மட்டம் 13.02 அடியாக வும், பொய்கை அணை நீர்மட்டம் 17.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.06 அடியாகவும், உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது.

    Next Story
    ×