search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு

    • திற்பரப்பு அருவியில் 7-வது நாளாக குளிக்க தடை
    • கோழிப்போர்விளையில் 92.8 மில்லி மீட்டர் பதிவு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது. மலையோர பகுதிகளிலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை வானிலை மையம் குமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரித்து உள்ளது. அதன்படி மாவட் டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப் பட்டது.

    கோழிப்போர்விளையில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிக பட்சமாக 92.8 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. குருந்தன்கோடு, மயிலாடி, கொட்டாரம், கன்னிமார், தக்கலை, இரணியல், ஆரல்வாய் மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.

    அணைகளின் நீர்மட் டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சிற்றாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து குறைய தொடங்கிய தையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது. சிற்றாறு அணைகளிலிருந்து வெளி யேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதை யடுத்து கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைய தொடங்கி யுள்ளது.

    இருப்பினும் திற்பரப்பில் மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்று 7-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 39.23 அடியாக இருந்தது. அணைக்கு 1570 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 226 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.35 அடியாக இருந்தது. அணைக்கு 1116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர மட்டம் நேற்று ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 20.70 அடியாக இருந்தது. மாம்பழத்துறை யாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 49.70 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 53.6, பெருஞ்சாணி 57.4, சிற்றார்1- 18, சிற்றார்-2 25.6, பூதப்பாண்டி 22.4, களியல் 35.8, கன்னிமார் 41.8, கொட்டாரம் 17.4, குழித்துறை 11.6, மயிலாடி16.4, நாகர்கோவில் 19.4, புத்தன்அணை 54.6, சுருளோடு 46.4, தக்கலை 55, குளச்சல் 18.4, இரணியல் 26, பாலமோர் 52.2, மாம்பழத்துறையாறு 41.8, திற்பரப்பு 33.8, ஆரல்வாய்மொழி 7.2, கோழிப்போர்விளை 92.8, அடையாமடை 49.1, குருந்தன்கோடு 26, முள்ளங்கினாவிளை 57.4, ஆணைக்கடங்கு 38.4, முக்கடல் 22.2.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 75-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலையில் நேற்று மேலும் 5 வீடுகள் இடிந்துள்ளன. கல்குளம் தாலுகாவில் 4 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடும் இடிந்துள்ளது. மேற்கு மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

    ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை யின்றி தவித்து வருகிறார்கள். தோவாளை, செண்பக ராமன் புதூர் பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரண மாக செங்கல் விலை உயர்ந்துள்ளது.

    Next Story
    ×