search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
    X

    இரணியல் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

    • ரெயில்வே அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக மனு பலமுறை அனுப்பி கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று குவிந்தனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே நெய்யூர் பேரூ ராட்சிக்குட்பட்ட பரம்பை கண்ணோடு கொக்கோட்டி லிருந்து சரல்விளை பாளை யம், பழவண்டான்கோணம் ஆகிய ஊர்கள் செல்ல ரெயில் வழித்தடத்தில் மேம்பாலம் அமைத்து தரும்படி மாவட்ட கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக மனு பலமுறை அனுப்பி கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில் நெய்யூர் பேரூராட்சி தலைவர் பிரதீபா, வார்டு கவுன்சிலர்கள் ராஜகலா ஹரிதாஸ், வக்கீல் ஜெகன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று குவிந்தனர்.

    இதனை அடுத்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார், சப்-இன்ஸ் பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மேம்பாலம் கட்டுவது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் இடம் மனு அளித்து தீர்வு காண அறிவுரை கூறினார். இதனை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

    Next Story
    ×