என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
    X

    மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

    • காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் நாளை மறுநாள் (9-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, பழவிளை, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×