என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-1 மாணவன் கைது - சிறுவர் சீர்திருத்த ஜெயிலில் அடைப்பு
- பிளஸ்-1 படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவன் சிறுமியின் வீட்டிற்கு சென்றார்.
- விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவர்களது தாயார் நாகர்கோவிலில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை வழக்கம்போல சிறுமியின் தாயார் வேலைக்கு சென்றார். வீட்டில் சிறுமி மட்டுமே இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவன் சிறுமியின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பள்ளி மாணவன் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுது உள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சம்பவம் குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பள்ளி மாணவனுக்கு 16 வயது என்பதால் அவரை நெல்லை மாவட்டத்தில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.






