search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் துறையில் உள்ளவர்கள்  விளையாட்டில் சாதிக்க  முன்வர வேண்டும்
    X

    போலீஸ் துறையில் உள்ளவர்கள் விளையாட்டில் சாதிக்க முன்வர வேண்டும்

    • பதக்கம் பெற்ற பெண் போலீஸ் பேட்டி
    • தடகள போட்டிகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.

    நாகர்கோவில்:

    உலக காவலர் மற்றும் தீயணைப்பு துறையின ருக்கான தடகள போட்டி நெதர்லாந்தில் நடை பெற்றது.

    இந்த போட்டியில் குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வரும் கணபதிபுரத்தைச் சேர்ந்த பெண் காவலர் கிருஷ்ண ரேகா பங்கேற்றார். இவர் தடகள போட்டிகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்ற பெண் காவலர் கிருஷ்ணரேகா இன்று நெதர்லாந்தில் இருந்து நாகர்கோவில் வந்தார்.

    நாகர்கோவில் வந்த அவருக்கு குமரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பூச்செண்டுகள் கொடுத்து அவரை வரவேற்றார். கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், நாகர்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன் குமார் மற்றும் போலீசார் அவரை வரவேற்றனர்.பின்னர் கிருஷ்ணரேகா நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முதல்-அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு எனது நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். 77 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் மூன்று தங்கம் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கடந்த நான்கு மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். என்னுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.

    மேலும் இதேபோல் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கூடுதலாக அதிக பதக்கங்கள் பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். என்னை போல் போலீஸ் துறையில் விளையாட்டு வீரர்கள் ஏராளமானவர் உள்ளனர்.அவர்கள் விளையாட்டு துறையில் இதே போல் சாதித்து பதக்கங்கள் பெற வெளியே வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து இசை வாத்தியங்கள் முழங்க கிருஷ்ணரேகாவை அழைத்து வந்தனர். பின்னர் அவர் தனது சொந்த ஊரான கணபதிபுரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×