என் மலர்
உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் பலி
- முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்யும் போது திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சிவகுருநாதர் கீழே விழுந்தார்.
- படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
கன்னியாகுமரி :
தக்கலை அருகே ஆழ்வார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவகுரு நாதர் (வயது51). பெயின்டர் வேலை செய்து வருகின்றார்.
நேற்று மாலை சிவகுருநாதர் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் வரும் போது முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்யும் போது திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சிவகுருநாதர் கீழே விழுந்தார்.படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி எழில் நேச சந்தியா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.