என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் ஆனந்த பவன் ஓட்டல் திறப்பு
    X

    நாகர்கோவிலில் ஆனந்த பவன் ஓட்டல் திறப்பு

    • மக்களுக்கு நல்ல சைவ உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய ஓட்டலை தொடங்கியுள்ளோம்
    • திங்கட்கிழமை முதல் மதிய உணவு ரூ.120-க்கு வழங்கப்படுகிறது

    நாகர்கோவில் ;

    நாகர்கோவில் எம்.எஸ். ரோட்டில் தொப்பி வாப்பா பிரியாணி கடை அருகில் நாகர்கோவில் ஆனந்த பவன் சைவ ஓட்டல் புதிதாக திறக்கப்பட்டது. இதனை பெல்லா செல்வின் திறந்து வைத்தார். முன்னதாக ஓட்டல் உரிமையாளர் ஜாக்குலின் வரவேற்றார்.

    இதுகுறித்து அவரது கணவர் சோனி ஜான்சன் கூறியதாவது:-

    நாங்கள் நாகர்கோவிலில் தொப்பி வாப்பா பிரியாணி கடை, மிஸ்டர் ரெட் செப் ஓட்டல் மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் இட்லி கடை ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.

    நாகர்கோவில் மக்களுக்கு நல்ல சைவ உணவு கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இப்போது நாகர்கோவில் ஆனந்த பவன் என்ற புதிய ஓட்டலை தொடங்கியுள்ளோம். இதை எனது மனைவி ஜாக்குலின் நிர்வகித்து வர உள்ளார்.

    காலை டிபன், மதியம் 13 வகைகளுடன் சைவ சாப்பாடு இரவு டிபன் மற்றும் இந்திய, தென்னிந்திய உணவு வகைகள், சைனீஸ் கான்டினென்டல் உணவு வகைகள், தந்தூரி சேட்சா வகைகள் சேர்ந்த சிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு தயாரித்து பரிமாறப்படுகிறது.

    ஒரே நேரத்தில் 110 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் வகையில் தரைத்தளம் முதல் தளம் வசதி உள்ளது. பார்ட்டி ஹால் மற்றும் ஏசி வசதியும் உள்ளது. முதல் 2 நாட்கள் ரூ.99-க்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    திங்கட்கிழமை முதல் மதிய உணவு ரூ.120-க்கு வழங்கப்படுகிறது. எங்கள் உணவு நிறுவனங்களில் 105 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தர வேண்டும்.

    நாகர்கோவில் மக்களுக்கு நல்ல தரமான, ருசியான, ஆரோக்கியமான உணவு வழங்கவேண்டும் என்ப தற்காக இத்தொழிலில் சமூக அக்கறையுடன் கணவன், மனைவியாக ஈடுபட்டுள்ளோம். அடுத்து தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் எங்களது கிளைகளை தொடங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×