என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
- மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் முதியவரின் பின்னால் மோதியது.
- அங்கு சிகிட்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார் ? எந்த இடத்தை சேர்ந்தவர் என தெரியவில்லை.
கன்னியாகுமரி :
புதுக்கடையில் இருந்து காப்புக் காடு செல்லும் சாலையில் (வயது 75) மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது குன்னத்தூர் பகுதி பொற்றவிளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் (48) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் முதியவரின் பின்னால் மோதியது.
இதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிட்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார் ? எந்த இடத்தை சேர்ந்தவர் என தெரியவில்லை.
இது தொடர்பாக முஞ்சிறை கிராம நிர்வாக அலுவலர் அெலக்சாண்டர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Next Story






