என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடுதல் படகுகள் நிறுத்துவதற்காக விவேகானந்தர் மண்டப படகு தளத்தில் அதிகாரிகள் இன்று ஆய்வு
- படகு குழாமில் இருந்து தினமும் 3 படகுகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன
- 2 அதி நவீன சொகுசு படகுகள் வாங்கப்பட்டு இதுவரை அந்த படகுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலின் நடுவில் விவோனந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக படகு குழாமில் இருந்து தினமும் 3 படகுகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன.
விவேகானந்தர் மண்டப படகு தளத்தில் தற்போது ஒரு படகு மட்டுமே நிறுத்த முடியும். இங்கு கூடுதல் படகுகளை நிறுத்துவதற்காக ரூ.20 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இன்று பகல் சென்னை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மணிவாசன் தலைமையில் அதிகாரிகள் குழு, விவேகானந்தர் மண்டப படகு தளத்தில் ஆய்வு மேற்கொண்டது.
தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அருணாசலம், செயற்பொறியாளர்கள் வெள்ளைச்சாமி, சுஜாதா மற்றும் பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். விவேகானந்தர் மண்டபத்திற்கு 3 படகுகள் இயக்க ப்பட்டு வரும் நிலையில் மேலும் 2 அதி நவீன சொகுசு படகுகள் வாங்கப்பட்டு இதுவரை அந்த படகுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






