search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகுதியில் ரூ.52 லட்சம் செலவில் புதிய சாலை மேம்பாட்டு பணிகள்
    X

    கன்னியாகுமரி பகுதியில் ரூ.52 லட்சம் செலவில் புதிய சாலை மேம்பாட்டு பணிகள்

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • ஆரோக்கியபுரம் பஞ்சாயத்து பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட கோவளம் மற்றும் ஆரோக்கியபுரம் பஞ்சாயத்து பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சத்து 25 ஆயிரம் செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்தப் பணியின் தொடக்க விழா இன்று காலை நடந்தது. விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநில தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் தாமரைபாரதி, கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், ஊராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சங்கர், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், ஒன்றிய பொறியாளர் ஹெலன், அரசு ஒப்பந்ததாரர்கள் சுதா பாஸ்கர், ரமேஷ், மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.]

    Next Story
    ×