search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக ரவுண்டானா அகற்றம் - காங்கிரசார் போராட்டம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரி போலீசில் புகார்
    X

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக ரவுண்டானா அகற்றம் - காங்கிரசார் போராட்டம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரி போலீசில் புகார்

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது
    • காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் தங்களை கல்வீசி தாக்கியதாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதையடுத்து அந்த பகுதியில் இருந்த பழைய ரவுண்டானா அகற்றப் பட்டது. ரவுண்டானாவில் இருந்த சுதந்திர தினவிழா பொன் விழா ஸ்தூபியையும் அகற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் அங்கிருந்து கலந்து சென்றனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு பொதுப்பணித்துறை அதிகா ரிகள் மேற்பார்வையில் புதிதாக ரவுண்டான அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர்கள் சிலர் அந்த பணியை மேற்கொண்டி ருந்தனர்.

    அப்போது அங்கு வந்த காங்கிரசாருக்கும், அந்த பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரசார் அந்த பகுதியில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக மறுபுறம் பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் ஜெய லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் தொழிலாளர்கள் முருகன், சுடலையாண்டி ஆகியோர் தங்களை காங்கிரசார் தாக்கியதாக கூறி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்ந்துள்ளனர்.இதேபோல் காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் தங்களை கல்வீசி தாக்கியதாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நெடுஞ்சா லைத்துறை அதிகாரியும், நேசமணி நகர் போலீசில் புகார் மனு ஒன்று அளித்து ள்ளார்.

    புகாரில் ரவுண்டானா அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தங்களை வேலை செய்ய விடாமல் தடுத்து தொந்தரவு செய்வதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள் ளார். இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×