search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோதிரமலை-குற்றியார் தரை பாலம் மூழ்கியது - 10 மலையோர கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு
    X

    மோதிரமலை-குற்றியார் தரை பாலம் மூழ்கியது - 10 மலையோர கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு

    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை- 4 வீடுகள் இடிந்தது
    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.77 அடியாக இருந்தது. அணைக்கு 1565 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில் ;

    தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக குமரி மாவட் டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

    மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங் கள் வேரோடு சாய்ந்தன.

    நாகர்கோவிலில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதம் அடைந்தது.தீயணைப்பு வீரர்கள் சரிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

    பூதப்பாண்டி, குளச்சல், இரணியல், கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி, மார்த்தாண்டம், குழித்துறை, மாம்பழத்துறையாறு அணை பகுதிகளிலும் நேற்று இரவு இடைவிடாது மழை பெய்தது.

    மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 76 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

    பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள் ளது. சிற்றார்-1, சிற்றாறு-2 அணைகளின் நீர்மட்டம் 12 அடியை எட்டியதை யடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    குழித்துறையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்குள்ள தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளம் செல் கிறது. கோதையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. மோதிரமலை-குற்றியார் தரை பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. இதனால் தச்சமலை, களபாறை உள்பட 10 மலை யோர கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மலையோர கிராமங் களில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் பரிதவிப் பிற்கு ஆளாகி வருகின்றனர்.

    திற்பரப்பு பகுதியிலும் மழை கொட்டி தீர்த்து வருவதால் அருவியில் வெள்ளம் ஆர்ப் பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.77 அடியாக இருந்தது. அணைக்கு 1565 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 249 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.35 அடியாக உள்ளது. அணைக்கு 990 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 நீர்மட்டம் 12.4 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.13 அடியாகவும் உள்ளது. தொடர் மழையின் காரண மாக பாசன குளங்கள் மற்றும் கால்வாய்களின் கரை பகுதிகளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார் கள்.

    4 வீடுகள் இடிந்தது

    மழைக்கு அகஸ்தீஸ்வரம், விளவங் கோடு தாலுகா வில் தலா ஒரு வீடுகளும், தோவாளையில் 2 வீடு களும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கன மழை எச்சரிக்கை விடப்பட்டதை எடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கலெக்டர் அரவிந்த் விடுமுறை அறிவித்துள்ளார்.

    மேலும் மழை வெள்ள சேதங்கள் குறித்து தகவல் தெரிவிக்க நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறந்து செயல்பட்டு வருகிறது தீயணைப்பு துறையினரும் தயார் நிலை யில் உள்ளனர்.

    இன்று காலையில் வெயில் அடித்தது. அதன் பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. விட்டு விட்டு மழையும் பெய்தது.

    Next Story
    ×