என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாகர்கோவிலில் கிணற்றில் குதித்து தாய்-மகள் தற்கொலை முயற்சி
  X

  நாகர்கோவிலில் கிணற்றில் குதித்து தாய்-மகள் தற்கொலை முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெண்கள் இருவரும் கிணற்றில் உள்ள பைப்பை பிடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்
  • காப்பாற்றிய டி.எஸ்.பி. நவீன்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் இருவரையும் போலீசார் பாராட்டினர்.

  நாகர்கோவில் :

  நாகர்கோவில் பார்வதி புரம் சானல்கரை பகுதியில் உள்ள சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து நேற்று நள்ளிரவு பெண்க ளின் அபாய சத்தம் கேட்டது.

  இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் நாகர்கோவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீசார், நாகர்கோவில் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  அதன்பேரில் டி.எஸ்.பி. நவீன்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கிணற்றில் 2 பெண்கள் தத்தளித்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் கிணற்றுக்குள் குதித்தார். அப்போது பெண்கள் இருவரும் கிணற்றில் உள்ள பைப்பை பிடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

  பின்னர் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த தாய்-மகள் என்பது தெரியவந்தது. அவர்கள் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

  விசாரணையில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை வடிவீஸ்வரம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த பெண் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஏற்கனவே கணவன் திட்டியதாக மகளிர் போலீசில் புகார் செய்திருந்தார்.

  விசாரணைக்கு சென்றபோது கணவருடன் வந்த சிலர் தாயாரையும் தங்களையும் திட்டியதால் மன வருத்தம் அடைந்ததாகவும், இதனால் ஏற்பட்ட வருத்தத்தில் கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

  இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நள்ளிரவில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற 2 பெண்களை போலீசார் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை காப்பாற்றிய டி.எஸ்.பி. நவீன்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் இருவரையும் சக போலீசார் பாராட்டினர்.

  Next Story
  ×