search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் 60 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள்
    X

    குமரியில் 60 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள்

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • 60 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப் பில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக ஒருங்கி ணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம்- தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் கீழ் நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

    இத்திட்டமானது 2016-17-ம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விளைபொருட்களை (குறிப்பாக காய்கறிகள், பழங்கள்) இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதன் மூலம் விவசாயி கள் லாபம் அடை கின்றனர். இவ்வண்டிகள் மூலமாக விவசாயிகள் எளிய முறையில் காய்கனிகள் மற்றும் பழங்களை ஆங் காங்கே கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்ற னர்.

    பேரிடர் மற்றும் பெருந் தொற்று காலகட்டத்தில் வெளியே செல்ல முடியாத சூழலில் நுகர்வோர் வீட்டி லிருந்தபடியே நடமாடும் காய்கனி வண்டிகள் மூலம் காய் கறிகள் மற்றும் பழங் களை பெற்று வருகின்றனர். வேலை வாய்ப்பினை ஏற்ப டுத்தி தருகின்

    றது.

    இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர், பழங்குடியினர், பெண்கள், ஊனமுற்றோர் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும் மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளி களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இத்திட்டத்தின்கீழ் பயன டைய ஆதார் நகல், புகைப் படம், குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவல கத்தில் சமர்ப்பிக்க வேண் டும்.

    2016-17-ம் நிதியாண்டில் 30 எண்களும், 2017-18-ம் நிதியாண்டில் 10 எண்களும் வழங்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் நுகர்வோருக்கு காய்கறிகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டபோது நடமாடும் காய்கனி வண்டிகளின் பங்கு அளப்பறியது. அதன் ஒரு பகுதியாக ஒருங்கி ணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி தேசிய தோட் டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் ஒன்றிற்கு ரூ.15 ஆயிரம் மானியம் வீதம் 30 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் நிதி இலக்கு பெறப் பட்டது.

    ராஜாக்கமங்கலம் மற்றும் தோவாளை வட்டாரங்களை சேர்ந்த 30 பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் வழங்கப் பட்டது. அதனைத்தொ டர்ந்து 2023-2024-ம் நிதியாண்டில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டி ஒன்றுக்கு ரூ.15,000 மானியம் வீதம் 30 எண்ணத்திற்கு ரூ.4,50,000 நிதி இலக்காக பெறப்பட்டு, அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் 4 பயனாளி களும், தோவாளை வட்டாரத்தில் 3 பயனாளி களும், முஞ்சிறை வட்டா ரத்தில் 3 பயனாளிகளும், ராஜாக்கமங்கலம் வட்டா ரத்தில் 3 பயனாளிகளும், தக்கலை வட்டாரத்தில் 3 பயனாளிகளும், குருந்தன் கோடு வட்டாரத்தில் 4 பயனாளிகளும், கிள்ளியூர் வட்டாரத்தில் 3 பயனாளி களும், திருவட்டார் வட்டா ரத்தில் 3 பயனாளிகளும் மற்றும் மேல்புறம் வட்டா ரத்தில் 4 பயனாளிகளும் என தேர்வு செய்யப்பட்ட 30 பயனாளிகள் என மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப் பில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×