என் மலர்
உள்ளூர் செய்திகள்

திக்கணங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மைக் செட் உரிமையாளர் சாவு
- நிற்காமல் சென்ற வாகனத்தை கண்காணிப்பு காமிராக்கள் மூலம் போலீசார் தேடுகிறார்கள்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே உள்ள வாளோடு பகுதியை சேர்ந்தவர் வேல்தாஸ் (வயது 45). இவர் ஒலி, ஒளி சவுண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் வேல்தாஸ், மோட்டார் சைக்கிளில் செம்பொன் விளை-திங்கள்நகர் சாலை யில் சென்றார். பெத்தேல்பு ரம் பகுதியில் செல்லும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிள், வேல்தாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வேல்தாஸ் பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று வேல்தாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி அமுதா, குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.