search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இன்று 4 இடங்களில் மெகா மருத்துவ முகாம்
    X

    குமரி மாவட்டத்தில் இன்று 4 இடங்களில் மெகா மருத்துவ முகாம்

    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்
    • காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்தவருக்கு உடனடியாக காப்பீடு அட்டை வழங்கவும் நட வடிக்கை

    நாகர்கோவில் :

    மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மெகா மருத்துவ முகாம் நடந்தது. குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப் பட்டது. பொன்மனை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தனியார் மற்றும் அரசு டாக்டர் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம் போன்ற டாக்டர்களும் சிகிச்சை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கவிமணி பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் மேயருமான மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் மேயர் மகேஷ் பரிசோதனை செய்து கொண்டார். அதன்பிறகு அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்தவருக்கு உடனடியாக காப்பீடு அட்டை வழங்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இதைத்தொடர்ந்து காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்த 2 பேருக்கு அதற்கான அட்டையை மேயர் மகேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மருத்துவ கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ், சூப்பிரண்டு அருள்பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பரக்குன்று ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய மருத்துவ முகாம் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    Next Story
    ×