search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் துப்பாக்கியை காட்டி நகை பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
    X

    நாகர்கோவிலில் துப்பாக்கியை காட்டி நகை பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

    • கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரணை
    • துப்பாக்கியை காட்டி 20 பவுன் நகையை கொள்ளையடித்து காரில் சென்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்த வர் முகமது உமர் சாகிப் (வயது 55). வெளி நாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்போது இங்கேயே வசித்து வருகிறார்.

    இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின், மகள் மற்றும் மாமியாருடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். வீட்டில் முகமது உமர் சாகிப் மட்டும் இருந் தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் முகமது உமர் சாகிப்பிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு காரில் சென்றனர்.

    இதுகுறித்து முகமது உமர்சாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். ெகாள்ளை தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியைச் சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகிய பாண்டியபுரத்தைச் சேர்ந்த கவுரி, இருளப்புரத்தைச் சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன்புகாரி, மேல சரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ்மீரான் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டது.

    கொள்ளைக்கு பயன்ப டுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை யர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது. தனி படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர்.

    இந்த நிலையில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் ஜெயிலில் அடைக் கப்பட்டனர். தலைமறை வாகி இருந்த 4 பேரை தேடி வந்த நிலையில் ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரண டைந்தனர். இவர்களை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கோட்டார் போலீசார் 3 பேரையும் காவலில் எடுத்தனர். அவர் களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தலைமறைவாகி இருந்த முக்கிய குற்றவாளி சார்லசை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கோவில்பட்டியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சார்லஸை போலீ சார் சுற்றி வளைத்து பிடித்த னர். பிடிபட்ட சார்லஸை நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து விசாரித்து வரு கிறார்கள். கைது செய் யப்பட்ட சார்லசுக்கு குமரி மாவட்டத்தில் வேறு திருட்டு வழக்கு களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    Next Story
    ×