search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலி
    X

    களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலி

    • உணவு சாப்பிடுவதற்கு வாகனத்தை நிறுத்தி விட்டு தோமஸ் சாலையை கடந்து சென்றார்.
    • சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி தோமஸ் தூக்கி வீசப்பட்டார்.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியை சேர்ந்தவர் தோமஸ் (வயது 55), லாரி டிரைவர்.

    இவர் இன்று அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து லாரியில் பழைய பொருட்கள் ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் புறப்பட்டார். களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் வந்தபோது உணவு சாப்பிடுவதற்கு வாகனத்தை நிறுத்தி விட்டு தோமஸ் சாலையை கடந்து சென்றார்.

    அவர் சாப்பிட்டு விட்டு சாலையை கடக்கும் போது மார்த்தாண்டத்தில் இருந்து நித்திரவிளையை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் தோமஸ் தூக்கி வீசப்பட்டார். விபத்தினை நேரில் கண்டவர்கள் அங்கே ஓடி வந்தனர்.

    அவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே தோமஸ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தோமஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். களியக்காவிளை ஒற்றாமரம் பகுதியில் இரவு நேரங்களில் அதிகமாக ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் உணவு சாப்பிடுவதற்கு வாகனங்கள் சாலையோரம் நிறுத்துவதால், வாகன நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் பலர் உயிரிழப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே இரவு நேரங்களில் செயல்படும் ஓட்டல்களுக்கு நேர கட்டுப்பாடு வழங்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×