search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிள்ளியூர் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகள் பட்டியல் - ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் வழங்கினார்
    X

    கிள்ளியூர் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகள் பட்டியல் - ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் வழங்கினார்

    • சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களில் மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும்
    • சாலையின் நடுவே பதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்காமல் உடைந்து சாலையில் அதிக மான இடங்களில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி :

    தி.மு.க. அரசு பொறுப் பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களில் மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் கடிதம் எழுதினார்.

    இதனையடுத்து கிள்ளியூர் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்திடம் வழங்கினார். மனுவில் கூறப்பட்டுள்ள முக்கியமான கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

    குமரி மாவட்டத்தில் சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு கடந்த 2006 -ம் ஆண்டு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வழியாக, ஐரேனிபுரம் முதல் சடையன்குழி, கிள்ளி யூர், பாலூர், கருங்கல், மத்திகோடு, திக்கணங்கோடு, திங்கள்நகர் வரை சாலையின் நடுவே பதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்காமல் உடைந்து சாலையில் அதிகமான இடங்களில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. எனவே, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க சாலையின் நடுவே பாதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்களுக்கு பதிலாக டி.ஐ. பைப்புகளை சாலையின் ஓரமாக பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2019 -ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஒரு தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் இருக்கவேண்டும் என்ற அரசு விதிமுறைப்படி கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களையும், காவல் நிலையங்களையும் உட்படுத்தி மாவட்ட உரிமை யியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்து தர வேண்டும்.

    ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதடைந்துள்ள பழைய கட்டிடமான ஆய்வக பிரிவு கட்டிடம், புற நோயாளிகள் கட்டிடம் மற்றும் குடும்ப நலப்பிரிவு கட்டிடம் ஆகிய கட்டிடங்களை அகற்றி அந்த இடத்தில் 30 -படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் அமைக்க வேண்டும்.

    பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்ற கருங்கல் பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு விரி வாக்கம் செய்து நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையமாக மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட மீனவ மக்கள் பயன்பெறும் வகை யில் மீன்வளக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    Next Story
    ×