என் மலர்
உள்ளூர் செய்திகள்

செண்பகராமன்புதூர் சானல் கரையில் மண் சரிவு - போக்குவரத்து துண்டிக்கும் அபாயம்
- பெய்த மழையால் மண் சரிவு ஏற்பட்டு அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி :
தோவாளை வழியாக செண்பகராமன்புதூர் சாலையில் செண்பக ராமன்புதூர் சானல் கரையோரம் நேற்று இரவு பெய்த மழையால் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த சாலையை பூதப்பாண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொது மக்களும் விவசாயிகளும் பயன்படுத்தி வருகிறார்கள். சாலையில் ஏற்பட்ட மண் சரிவு பற்றி தகவல் அறிந்ததும் செண்பகராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், பொதுப் பணித்துறை அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வை யிட்டனர். மேலும் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Next Story