search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் பகுதியில் கும்பப்பூ அறுவடை தொடங்கியது
    X

    சுசீந்திரம் பகுதியில் கும்பப்பூ அறுவடை தொடங்கியது

    • அணை யின் நேரடி தண்ணீர் பாசனத்தை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுகிறார்கள்
    • தோவாளை சேனல், அனந்தனார் சேனல் உள்பட அனைத்து சேனல்களிலும் ஷிப்டு முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயி கள் சாகுபடி செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக் குளங் கள் உள்ளது. மேலும் அணை யின் நேரடி தண்ணீர் பாசனத்தை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுகிறார்கள். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர்.

    தேரூர், சுசீந்திரம், அருமநல்லூர், பூதப்பாண்டி, தக்கலை, குலசேகரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டரில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். விவசாயிகளுக்கு பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து தங்கு தடை இன்றி தண்ணீர் வழங் கப்பட்டு வருகிறது.

    தோவாளை சேனல், அனந்தனார் சேனல் உள்பட அனைத்து சேனல்களிலும் ஷிப்டு முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடை இன்றி வழங் கப்பட்டது. இந்த நிலை யில் தேரூர், சுசீந்திரம் பகுதியில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதையடுத்து அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது.

    சுசீந்திரம், தேரூர் பகுதி களில் அறுவடை எந்திரம் மூலமாக அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெற்களை உடனடியாக விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். டிராக்டர் மூலமாக கொண்டு செல் லப்படும் நெற்கள் கோட் டார் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட் டத்தை பொறுத்த மட்டில் இன்று காலை 42.36 அடியாக உள்ளது.அணைக்கு 797 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 731 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.55 அடியாக உள்ளது. அணைக்கு 41 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணை யில் இருந்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    பேச்சிபாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து 1121 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×