என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செட்டிவிளை முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா - இன்று மாலை தொடங்குகிறது
    X

    செட்டிவிளை முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா - இன்று மாலை தொடங்குகிறது

    • மாலை 6 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் விமர்சன கண் திறப்பு விழா நடக்கிறது.இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது
    • காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனையும் அதை தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடக்கிறது

    நாகர்கோவில் :

    சாமிதோப்பு அருகே செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (5-ந்தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இன்று மாலை 6 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் விமர்சன கண் திறப்பு விழா நடக்கிறது.இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை (6-ந்தேதி) காலை 5 மணிக்கு மங்கள வாத்தியம், 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் காலை உணவு வழங்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து நவகிரக சாந்தி சுதர்சன ஹோமம், தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 12.30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. மாலை 6 மணிக்கு வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்னதானம் வழங்கப்ப டும்.

    நாளை மறுநாள் (7-ந் தேதி) காலை 6 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு திருமுறை பாராயணம், 7 மணிக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனையும் அதை தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×