என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்வியில் குமரி மாவட்டம் சிறந்து விளங்குகிறது இளைய சமுதாயத்தினருக்கும், மாணவர்களுக்கும் நம்பிக்கை உள்ளவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
- நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா இன்று நடந்தது
- விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர்.
நாகர்கோவில் : நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி முருகன் வரவேற்றார். மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த மோகன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர ஜவகர், கவுன்சிலர் விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் குமரி மாவட்டம் சிறந்து விளங்குகிறது. வகுப்பறை யில் கற்கும் பாடம் மட்டும் போதுமான தாக இருக்கக் கூடாது, மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வரவேண்டும் என்பது தான் முதல்-அமைச்சரின் எண்ணம். அவரது அறிவுறுத்தலின் பேரில் உருவான திட்டம் தான் கலை திருவிழா திட்டமாகும். கடந்த ஆண்டு 27 லட்சம் மாணவர்கள் கலைத் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக் கொண்டு வந்தார்கள். இந்தக் கலை திருவிழா மூலமாக மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்ததை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெற்றோர், தங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது. எதிர் வீட்டுக்காரர் டாக்டர் ஆகி விட்டான், என்ஜினியர் ஆகிவிட்டான் என்று சொல்லக்கூடாது. உங்களுடைய குழந்தைகளின் திறமைகளை நீங்கள் தான் வெளிக் கொண்டு வர வேண்டும்.
நான் முதல்வன் திட்டம் எனக்கு கனவு திட்டம் என்றும், நான் முதல்வனாக இருந்தால் போதாது. மாணவராகிய நீங்கள் முதல்வராக வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இளைய சமுதாயத்தி னருக்கும், மாண வர்களுக்கும் நம்பிக்கை உள்ளவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். தமிழகத்தில் 30 மாத காலத்தில் 51 திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்ப டுத்தி வருகிறோம்.
மாணவருடைய தன்னம்பிக்கையை வெளி கொண்டு வர வேண்டும். உளவியல் ரீதியாக மாற்றத்தை கொண்டுவரும் திருவிழா தான் இந்த கலைத் திருவிழா ஆகும். மாண வர்கள் கலை திறமையை காட்ட வேண்டும். படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். முதல்-அமைச்சர் தீட்டுகின்ற திட்டங்கள் அனைத்தையும் வெற்றி கரமாக செயல்ப டுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இரு கண்களில் ஒன்று கல்வித்துறை என்று கூறுவார்கள். கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அரசு செயல்படுகிறது. கல்வி தான் சமூகத்தின் வளர்ச்சியை அளவீடு செய்கிறது. இதனால் தான் கல்வியை சிறந்த முறையில் மக்களுக்கு தரவேண்டும் என்று அரசு செயல்படுகிறது.
இந்த நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக தந்தை எந்த தொழில் செய்கிறாரோ, அந்த தொழிலை தான் மகனும் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. அதை யெல்லாம் அடித்து உடைத்து நீங்கள் செய்கின்ற தொழிலையும், கற்கின்ற கல்வியை யும் நீங்களே முடிவு செய்யலாம் என்பதை கொண்டு வந்தது தி.மு.க. வின் வரலாறு ஆகும்.
திராவிட மாடல் என்றால் என்ன? என்பது பேசும் பொருளாக உள்ளது. எல்லோரையும் உள்ளடக்கிய அரசு தான் திராவிட மாடல் அரசு. சமூகத்தில் யாரையும், எங்கேயும் ஒதுக்கி வைத்து விடக்கூடாது. ஒருவர் கூட கல்வி கற்காமல் இருக்கக் கூடாது. ஒருவர் கூட பள்ளிக்கு, உயர் கல்விக்கு செல்ல தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அனைவருக்கும் கல்வித் திட்டத்தை செயல் படுத்துகிறார்கள்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தையும், உயர்கல்வி செல்கின்ற பெண் களுக்கு புதுமைப் பெண் திட்டத்தையும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கல்வி விகிதாச் சாரத்தில் தமிழகம் 75 சதவீதத்தை எட்டி உள்ளது. தமிழனுடைய வரலாற்றில் கலையும், இலக்கியமும் பிரிக்க முடியாத அங்கமாக உள்ளது.
நமது மாவட்டமும் கலையில் பெயர் பெற்ற மாவட்டமாகும். சிலம்பம், அடிமுறை என பல கலை கள் உள்ளது. வர்மக்கலை ஒன்று உள்ளது என்றால் குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. சிலம்பு கலையை உயர்த்துவதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கலைக்கும் இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தி.மு.க. ஆட்சி தற்போது பொற்கால ஆட்சி யாக விளங்கி வருகிறது என்றார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தி.மு.க. மாநில நிர்வாகி தில்லை செல்வம், மாநகரச் செயலாளர் ஆனந்த், மாவட்ட நிர்வாகிகள் அருண்காந்த், பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலை திருவிழாவானது 3 பிரிவுகளாக நடந்தது. இதில் மொத்தம் 4,501 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடிப்பவர்கள், மாநில அளவிலான போட் டிக்கு தகுதி பெறுவார்கள். மாநில அளவில் நடை பெறும் போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.






