search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆண்டுகளாக வெளிநாட்டில் தவிக்கும் குமரி வாலிபர்
    X

    2 ஆண்டுகளாக வெளிநாட்டில் தவிக்கும் குமரி வாலிபர்

    • கணவரின் வழக்குச் செலவுக்காக வேலைக்குச் சென்ற பெண்ணால் தவிப்புக்குள்ளான 3 குழந்தைகள்
    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பினர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டம் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவரது மனைவி பிரேமி. இவர்களுக்கு ஜோலின், சிசினோ என்ற 2 மகள்களும், ஆரவி என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த 20 ஆண்டுக ளுக்கும் மேலாக ஓமன் நாட்டில், அந்த நாட்டின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் தனியார் உணவகத்தில் உதவி மேலாளராக சுரேஷ் பணி புரிந்து வந்தார். அவரது மனைவி பிரேமி தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தார். 3 குழந்தைகளும் ஓமன் நாட்டிலேயே படித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரண மாக சுரேசும் அவரது மனைவியும் வேலையை இழந்து உள்ளனர். இதனால் குடும்பத்துடன் இந்தியா திரும்ப சுரேஷ் திட்டமிட்டார். அப்போது தான் 19 ஆண்டுகளாக பணிசெய்த நிறுவனத்தில் தனக்கான பண பிடிப்பு (பி, எப்) தொகையினை கேட்டு உள்ளார். அதை கொடுக்க நிர்வாகம் மறுத்துஉள்ளது.

    இதனால் அந்தநாட்டின் நீதிமன்றத்தில் சுரேஷ் வழக்கு தொடர்ந்துஉள்ளார்.இதில் அவருக்கு ரூ.10 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்த சூழ்நிலையில் கொரோனா உச்ச கட்டத்தில் அங்கிருந்து சொந்த நாடு செல்ல குடும்பத்துடன் விமான நிலையம் வந்த சுரேசை நிறுவனத்தில் நடைபெற்ற வேறு ஒரு வழக்கில் தொடர்பு படுத்தி இந்தியா செல்ல, ஓமன் நாட்டு காவல்துறை அனுமதி மறுத்துஉள்ளது.

    இதனால் 3 குழந்தைகளை மட்டும் அழைத்து கொண்டு பிரேமி இந்தியா திரும்பினார்.கன்னியா குமரி வந்த அவர், இது குறித்து கலெக்டர்மற்றும்முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு க்கு மனு அனுப்பி கணவரை இந்தியா அழைத்து வர முயற்சி செய்துஉள்ளார்.

    மேலும் வருமானம் இல்லாததால் குடும்ப செலவு மற்றும் வேலை இல்லாமல் வெளிநாட்டில் தவிக்கும் கணவரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 3 குழந்தைகளையும் வயதான தனது மாமியார் பாத்திமா மேரி வசம் ஒப்படைத்து விட்டு அவர் சவுதி நாட்டுக்கு நர்ஸ் வேலைக்கு சென்றுவிட்டார்.

    75 வயதான பார்வை குறைபாடு உள்ள பாத்தி மா மேரி சின்ன முட்ட த்தில் உள்ள தனது இல்ல த்தில் பெட்டி கடை நடத்தி தனது பேரக் குழந்தைகளை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நிரபராதியான தன்னைஇந்தியா கொண்டு வர தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டு ம் என்று கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை சுரேஷ் வெளியிட்டுஉள்ளார்.

    மேலும் வெளிநாட்டில் தவிக்கும் தங்களது தந்தை யை மீட்க வேண்டும் என்று சுரேஷின் குழந்தைகள் மற்றும் அவரது தாய் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். தாய், தந்தை வெவ்வேறு நாட்டிலும் குழந்தைகள் குமரியில் வயதான பாட்டியுடன் சிரமபடுவதாலும் அரசு இதில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

    Next Story
    ×