search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பயண நேரம் குறைகிறது
    X

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பயண நேரம் குறைகிறது

    • அக்டோபர் 10-ந்தேதி முதல் ரெயிலின் வேகம் அதிகரிப்பு
    • இருவழிபாதையை விரைந்து முடித்தால் 8 மணி நேரத்தில் சென்னை செல்லலாம்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ரெயிலாகும். இந்த ரெயிலில் நாகர்கோவிலில் இருந்து தினசரி சராசரியாக ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வரும் வருவாயில் 50 சதவீதம் இந்த ரெயில் மூலம் கிடைத்து வருகிறது.

    திருவிதாங்கூர் சமஸ் தானத்தில் இருந்து தமிழ் மொழி மக்கள் உள்ள பகுதிகளை பிரித்து புதிய கன்னியாகுமரி மாவட்டம் உதயமாகி 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது. தாய் தமிழகத்துடன் இணைந்தாலும் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு நேரடி ரெயில் வசதி இல்லாமல் திருநெல்வேலிக்கு பஸ்களில் சென்று அங்கிருந்து சென்னை செல்லும் ெரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது.

    பின்னர் நீண்ட காலத்திற்கு பிறகு கன்னியாகுமரியில் இருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 1994-ம் ஆண்டு நேரடியாக ரெயில் மூலம் இணைக்கப்பட்ட அந்த ரெயில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் ஆரம்ப காலகட்டங்களில் சென்னை எழும்பூர் மார்க்கம் மீட்டர் கேஜ் இருந்த காரணத்தால் ஈரோடு வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டது. பின்னர் சென்னை எழும்பூர் மார்க்கம் அகலபாதை யாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு சென்னை எழும்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    குமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் இந்த ரெயில் அதிகாலை செல்லும்படியாக இயக்கப் படுவதால் குமரி மாவட்ட மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும். தற்போது இந்த ரெயில் மாலை 5.05 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு சீக்கிரம் சென்றுவிட்டு திருநெல்வேலியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைத்து விட்டு பின்னர் சென்னை புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு சென்னை எழும்பூர் செல்கிறது.

    அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி முதல் இந்த ரெயில் வேகம் அதிகரிக்கப்பட்டு திருநெல்வேலியில் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு அந்த நேரத்துக்கு பதிலாக கன்னியாகுமரியிலிருந்து தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய கால அட்டவணையில் இயங்கும்

    கன்னியாகுமரி - 5.45, நாகர்கோவில் - 6.07 (17:25)வள்ளியூர் -6.35 திருநெல்வேலி - 7.20 இந்த கால அட்ட வணையில் இயக்கப்பட இருக்கின்றது.

    இது குறித்து குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:-

    தற்போது மதுரை முதல் சென்னை வரை உள்ள ரெயில்பாதையில் இருவழிபாதை பணிகள் 100 சதவீதமும் மதுரை முதல் நாகர்கோவில் வரை உள்ள இருவழிபாதை பணிகள் 90 சதவீதமும் முடிந்துவிட்டது இன்னமும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை வெகுவாக குறைக்க முடியும்.

    இது மட்டுமல்லாமல் கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை உள்ள இருவழிபாதை பணிகள் முடிவு பெற்று விட்டால் சென்னைக்கு சுமார் 8 மணி நேரத்தில் போய் சேர முடியும். இவ்வாறு இருவழிபாதை பணிகள் முடிவு பெறும் பட்சத்தில் இந்த கன்னியாகுமரி ரெயிலை 7.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது சூரிய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு சுற்றுலா பயணிகள் இந்த ரெயிலில் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும்.

    கன்னியாகுமரி - சென்னை ரெயிலின் கால அட்டவணை மாற்றம் காரணத்தால் நாகர்கோவில் - தாம்பரம் ரயில் முன்பு இயங்கிய கால அட்டவணையின் படி நாகர்கோவிலிருந்து 5.05 மணிக்கு இயக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் இந்த ரயிலின் கால அட்ட வணையை மாற்றும் போது நாகர்கோவில் - தாம்பரம் அந்தோதையா ரயில் நாகர்கோவிலிருந்து புறப்படும் கால அட்டவணை மாற்றம் செய்து 4.15 க்கு (தற்போது நாகர்கோவில் - தாம்பரம் ெரயில் செல்லும் நேரம்) நாகர்கோவிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.

    Next Story
    ×