search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரி 5-ம் திருவிழாவையொட்டி வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த கன்னியாகுமரி பகவதி அம்மன்
    X

    நவராத்திரி 5-ம் திருவிழாவையொட்டி வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த கன்னியாகுமரி பகவதி அம்மன்

    • கூடை-கூடையாக மலர் தூவி வழிபட்ட இலங்கை பக்தர்கள்
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ - திரளான பக்தர்கள் தரிசனம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. 5-ம்திருவிழாவான நேற்று இரவுபரத நாட்டியம் நடந்தது.

    அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக் கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்த ருளி கோவிலின் வெளிபிர காரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேல் தலைமையில் இலங்கை பக்தர்கள் கூடை-கூடையாகதாமரை, மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர் களை தூவி வழிபட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் தம்பித்தங்கம், தென்தாமரை குளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் சிவபாலன், தோவாளை ஒன்றிய பொரு ளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்டபெருமாள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மா சனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.6-ம்திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்த ருளி கோவிலின் வெளிப்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    Next Story
    ×