search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.35½ லட்சம் வருமானம் கடந்த முறையை விட ரூ.10 லட்சம் அதிகம்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.35½ லட்சம் வருமானம் கடந்த முறையை விட ரூ.10 லட்சம் அதிகம்

    • 17 நிரந்தர உண்டியல்களும் நேற்று திறந்து எண்ணப்பட்டன
    • 101 கிராம் தங்கமும் 85 கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலாபயணிகள் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி பகவதிஅம்மன்கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல் களும் நேற்று திறந்து எண்ணப்பட்டன. குமரிமாவட்ட திருக்கோவில் களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் மேலாளருமானஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைஆய்வாளர் சுஜித், கோவில் பொரு ளாளர் ரமேஷ் ஆகியோர்முன்னி லையில் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணி வரை நடந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பணியா ளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி செவ்வாடை பெண் பக்தர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். இதில் உண்டியல் மூலம் ரூ.35 லட்சத்து 45 ஆயிரத்து 322 ரொக்க பணம் வசூலாகி உள்ளது.

    இது தவிர 101 கிராம் தங்கமும் 85 கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர், மலேசியா ரிங்கிட், ஆஸ்திரேலியா டாலர் போன்ற வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி இருந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கடந்த முறையை விட ரூ.10லட்சம் உண்டியல் வசூல் அதிக ரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×