search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிஜிட்டல் சார்ட் முறை அறிமுகம்
    X

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிஜிட்டல் சார்ட் முறை அறிமுகம்

    • மற்ற ரெயில்களிலும் கொண்டு வர திட்டம்
    • டிக்கெட் பரிசோதகர்களின் பணி இனி மிகவும் எளிமையானதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்கும்.

    நாகர்கோவில்:

    ரெயில்வே துறையில் தற்போது டிஜிட்டல் முறையில் பயணிகள் அட்டவணை சரிபார்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

    அதாவது டிக்கெட் பரிசோதகர்கள் இனி டேப்லெட் மூலமாக டிஜிட்டல் முறையில் பயணிகளின் அட்ட வணையை சரிபார்ப்பார்கள்.

    இதன் மூலம் டிக்கெட் பரிசோதகர்களின் பணி இனி மிகவும் எளிமையா னதாகவும், வெளிப்படை தன்மையுடனும் இருக்கும்.

    திருவனந்தபுரம் கோட்டத்தில் முதற்கட்ட மாக 140 டிஜிட்டல் டேப்லெட்டுகள் ரெயில்வேத்துறையால் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் நாகர்கோவில் பணிமனைக்கு 20 டிஜிட்டல் டேப்லெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது கன்னியா குமரி, அனந்தபுரி, குருவாயூர், தாம்பரம் ஆகிய ரெயில்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதில் குறிப்பாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த திட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.

    குமரி மாவட்டத்தில் இருந்து இயங்க கூடிய முக்கியமான ரெயில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்பதால் முதலில் அந்த ரெயிலில் டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதோடு வெகு விரைவில் அனைத்து ரெயில்களிலும் டிஜிட்டல் முறையில் பயணிகள் அட்டவணை சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வும் கூறப்படுகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் இனி ரெயில்களில் சார்ட் பிரிண்ட் எடுக்க பயன்படுத்தும் காகிதத்தின் பயன்பாடு வெகுவாக குறையும். அதோடு ரெயிலில் இருக்கைகள் காலி விவரங்கள் இணைய தளத்தில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். இதனால் பயணிகள் ரெயிலில் முன்பதிவு இருக்கைகள் விவரத்தை பார்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ஒரு சில பயண சீட்டு பரிசோத கர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு காத்திருப்போர் பட்டியல் இருக்கும் வேறு பயணிகளுக்கு பயண சீட்டு ஒதுக்கீடு செய்வது முற்றிலும் தவிற்கப்படும். வேறு பயணிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் அனைத்தும் ஒழிவு மறைவின்றி வெளிப்படையாக அனை வருக்கும் தெரியும் விதத்தில் இருக்கும்.

    இதற்கு முன்பு டிக்கெட் பரிசோதகர்கள், ஒரு பயணி வரவில்லை என்றால் காலியாக உள்ள அந்த இருக்கையை மற்றொரு பயணிக்கு ஒதுக்குவதற்கு முன், அடுத்த முக்கிய நிலையங்க ளை ரெயில் கடக்கும் வரை காத்திருந்து பின்னர் பயணி வரவில்லை என்று ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு ஆர்.ஏ.சி. அல்லது காத்திருப்போர் பட்டியிலில் உள்ள பயணிக்கு அந்த இருக்கை ஒதுக்கீடு செய்து வந்தார். இனி இது போன்று டிக்கெட் பரிசோதகர்க ளால் செய்ய முடியாது.

    அதாவது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாகர்கோவில் இருந்து முன்பதிவு செய்துள்ள ஒரு பயணி எதிர்பாராத விதமாக ரெயிலை தவற விடும் போது அவசரமாக சாலை மார்க்கமாக காரில் வள்ளியூர் ரெயில் நிலையம் சென்று ரெயிலில் ஏறலாம் என்று நினைத்தால் அது இனி முடியாது.

    ஏனென்றால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் புறப்பட்டதும் டிக்கெட் பரிசோதகர் வந்து சுமார் 5 நிமிடத்திற்குள் பயணிகள் விவரங்களை சரிபார்த்து டிஜிட்டல் டேப்லெட்களில் பதிவு செய்து விடுவார்.

    ஏதாவது பயணி வராமல் இருந்தால் அந்த விவரத்தை உடனே குறித்துவிட்டு ஆர்.ஏ.சி. அல்லது காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிக்கு அந்த இருக்கையை ஒதுக்கீடு செய்து விடுவார். எனவே இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க போர்டிங் பாயின்ட் முன்கூட்டியே தீர்மானித்து மாற்றி கொண்டு பயணிப்பது சிறப்பாக அமையும் என்று குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறியுள்ளார்.

    Next Story
    ×