search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்டர்சிட்டி ரெயிலை இரணியல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும்
    X

    இன்டர்சிட்டி ரெயிலை இரணியல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும்

    • இரணியல் ரெயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தில் வருவாய் அடிப்படையில் 27-வது இடத்தில் உள்ளது.
    • 2022-2023-ம் ஆண்டில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 405 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டிருப்பதா வது:-

    திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி ரெயில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலால் குமரி மாவட்ட பயணிகளும் பயன்பெறும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வழியாக திருவனந்த புரம் வரை நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிப்பு செய்யும் போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் முதலில் நிரந்தர நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது.

    இரணியல் ரெயில் நிலை யத்தில் நிறுத்தம் குறைந்த பட்சம் தற்காலிக நிறுத்தம் கூட கொடுக்கப்படவில்லை. நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மார்க்கமாக பகலில் 10 மணி நேரம் ரெயில் இல்லாத குறையை போக்க இந்த ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆனால் இந்த ரெயிலுக்கு இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்காதது எந்த நோக்கத்துக்காக ரெயில் நீட்டிப்பு செய்யப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை. இரணியல் ரெயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் நாகர்கோவில் ரெயில் நிலைய மும், மறுமார்க்கம் 15 கி.மீ. தொலைவில் குழித்துறை ரெயில் நிலையமும் அமைந்துள்ளது.

    குமரி மாவட்டம் அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம். எனவே அடுத்த ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தொலைவை பார்க்க கூடாது. இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டிருந்தால் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் 3 பிரிவாக பயணிகள் பயணம் செய்ய எளிதாக இருக்கும். ரெயில்வேத்து றைக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

    தற்போது இந்த ரெயில் பயணிக்கும் மொத்த தொலைவான 456 கிலோ மீட்டரில் சுமார் 368 கிலோ மீட்டர் தூரம் இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இதனால் ரெயில் கிராசிங்குக்காக எந்த ஒரு ரெயில் நிலையத்தில் நிற்பது கிடையாது. இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் முதல் திருச்சி வரை உள்ள இருப்புபாதைகளின் வேகமும் அதிகரிக்கும் வண்ணம் அடிப்படை கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் இதுவரை குறைக்கப்படவில்லை. இதன் மூலம் இன்டர்சிட்டி ரெயில் இரணியல் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு அதிக வசதி வாய்ப்புகள் உள்ளன.

    இரணியல் ரெயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தில் வருவாய் அடிப்படையில் 27-வது இடத்திலும், என்.எஸ்.ஜி. பிரிவில் 5-வது இடத்திலும் உள்ளது.

    2022-2023-ம் ஆண்டில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 405 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.4 கோடியே 97 லட்சத்து 76 ஆயிரத்து 708 வருவாய் கிடைத்துள்ளது.

    ரெயில்வே துறை சார்பில் நாகர்கோவில்- மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு திருவனந்தபுரத்துக்கும், கொல்லத்துக்கும் இடையே உள்ள சரயங்கீழ் ரெயில் நிலையத்துக்கு நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைபோல சென்னை எழும்பூர்- குருவாயூர் மற்றும் மதுரை- காச்சுகுடா ஆகிய 2 ரெயில்களுக்கும் கொடைரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் ரெயில் நிலையத்தில் திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் நிறுத்தம் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன்கருதி இன்டர்சிட்டி ரெயிலை இரணியலில் நிற்க அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×