search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் சாரல் மழை நீடிப்பு
    X

    குமரியில் சாரல் மழை நீடிப்பு

    • பேச்சிப்பாறை அணை 42 அடியை எட்டியது
    • திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே சாரல் மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலையில் நாகர்கோவிலில் சாரல் மழை பெய்தது. இதே போல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, புத்தன் அணை, சுருளோடு பகுதி களிலும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருக் கிறது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதி யில் அதிகபட்சமாக 5.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

    மலையோர பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணைக்கு 621 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 257 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68.80 அடியாக உள்ளது. அணைக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 535 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    சிற்றார்-1 அணை யின் நீர்மட்டம் 13.32 அடியாகவும், சிற்றார்-2-அணையின் நீர்மட்டம் 13.41 அடியாகவும் உள்ளது. பொய்கை அணைநீர்மட்டம் 17 அடியாகவும் மாம்பழத் துறையாறு நீர்மட்டம் 36.58 அடியாகவும் உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணி கள் வந்திருந்தனர். அவர் கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    Next Story
    ×