search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடிப்பு
    X

    குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடிப்பு

    • சிற்றார் 2- 32.4 மில்லி மீட்டர் பதிவு
    • பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. நாகர்கோவிலில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை பெய்தது. இதையடுத்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு சென்றனர்.

    தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் குளுகுளு சீசன் நிலவுகிறது. பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, மயிலாடி, குளச்சல், அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சிற்றாறு 2 அதிகபட்சமாக 32.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 35.10 அடியாக உள்ளது. அணைக்கு 603 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 641 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 17.45 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை யின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 10.76 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 23.4, பெருஞ்சாணி 9.6, சிற்றாறு 1-26, சிற்றார் 2-32.4, மயிலாடி 1.6, இரணியல் 2, ஆணைக்கிடங்கு 1.2, அடையாமடை 7.2, முள்ளங்கினாவிளை 4.6, நாகர்கோ வில் 1.2, பூதப்பாண்டி 7.2, சுருளோடு 9.2, கன்னிமார் 9.6, பாலமோர் 18.6, புத்தன் அணை 8.8, திற்பரப்பு 9.6.

    சாரல் மழையுடன் சூறைக் காற்றும் வீசி வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

    நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தென்னை மரம் முடிந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. பார்வதிபுரம், கன்னியாகுமரி, சுங்கான்கடை பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம் ஏற்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக அதை சரி செய்தனர்.

    Next Story
    ×